விநாயகர் ஊர்வலத்தின்போது இரு பிரிவினர் இடையே மோதல்!

Share this News:

வதோதரா (30 ஆக 2022): குஜராத்தில் வதோதரா பகுதியில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தின்போது இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வதோதராவில் “திங்கள்கிழமை இரவு விநாயகர் ஊர்வலம் பானிகேட் பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, கல்வீச்சு ஏற்பட்டதாகவும், அப்போது கல் ஒன்று மத ஸ்தலத்தின் ஜன்னலில் பட்டு ஜன்னல் கண்ணாடியை உடைத்துள்ளது. மேலும் சிறுபான்மையினர் சிலரும் தாக்கப்பட்டுள்ளனர்.இதனை அடுத்து அங்கு வன்முறை வெடித்துள்ளது.

கலவரப் பிரிவின் கீழ் இரு குழுக்களுக்கு எதிராக நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடைப்படையில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக நகர கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்ததால், அனைத்து அண்டை காவல் நிலையங்களில் இருந்தும் போலீசார் விரைந்து வந்து நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்று துணை ஆணையர் (குற்றப்பிரிவு) யுவராஜ்சிங் ஜடேஜா தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *