முஹம்மது பாசில் கொலை வழக்கில் 4 பேர் கைது!

Share this News:

பெங்களூரு (02 ஆக 2022): கர்நாடகாவில் முகமது பாசில் கொலை வழக்கை விசாரித்த கர்நாடக போலீசார் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் உத்தர கன்னடா, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கர்நாடகாவில் தட்சிண கன்னடா மாவட்டம் சூரத்கல் நகரில் ஜூலை 28ஆம் தேதி ஃபாசில் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

பாஜக யுவ மோர்ச்சா உறுப்பினர் பிரவீன் குமார் நெட்டாரே கொலைக்கு பழிவாங்கும் வகையில் இந்தூதுவாவினரால் ஃபாசில் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஃபாசிலின் குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க ஏசிபி அந்தஸ்து அதிகாரி தலைமையில் கொலையாளிகளை பிடிக்க போலீஸ் துறை தனிப்படை அமைத்தது. கொலைக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், வாகனத்தின் உரிமையாளர் அஜித் கிரஸ்தாவை (40) கைது செய்தனர்.

மேலும் கொலையாளிகள் கும்பல் குறித்து உறுதியான துப்பு கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்டவர்கள் யார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *