இந்துக்களின் வாக்குகளால் வெற்றி பெற்றவன் நான் – குலாம் நபி ஆசாத் பரபரப்பு பேட்டி!

Share this News:

புதுடெல்லி (12 பிப் 201): 1979 பொதுத் தேர்தலில், 95 சதவீத இந்து வாக்குகளைப் பெற்று ஒரு இந்து வேட்பாளரையே தோற்கடித்தவன் நான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

குலாம் நபி ஆசாத்தின் பதவிக் காலம் வரும் 15-ல் முடிவடைகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக அவர் பாராளுமன்றவாதியாக இருந்தவர். திங்களன்று குலாம்நபி ஆசாத் உட்பட பதவிக்காலம் முடியும் எம்.பி.,க்களுக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி குலாம் நபி ஆசாத்தை புகழ்ந்தார். “உங்களை நான் ஓய்வுபெற விடமாட்டேன். தொடர்ந்து ஆலோசனைகள் கேட்பேன். உணர்ச்சிப் பூர்வமாக பேசினார். இதனை ஒரு நாடகம் என்பதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசி தரூர் விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் குலாம் நபி ஆசாத் பாஜகவில் இணையப்போவதாக வதந்திகள் பரவின. இதற்கு பதிலளித்து பேசிய குலாம் நபி ஆசாத், “நான் பா.ஜ.க.,வில் சேரப்போவதாக வதந்தி பரப்புபவர்களுக்கு என்னைப் பற்றி தெரியாது. காஷ்மீரில் கருப்பு பனி பெய்யும் நாள் தான், பா.ஜ.க.,விலோ அல்லது வேறு கட்சியிலோ நான் சேரும் நாள்.” என கூறியுள்ளார்.

மேலும், “கடந்த காலங்களில் இருந்த இந்தியாவையே நான் விரும்புகிறேன் , 95% இந்து வாக்குகளை பெற்று 1979முஸ்லீம் வாக்குகளைப் பெற்று ஜனதா கட்சி நிறுத்திய இந்து வேட்பாளரை தோற்கடித்தவன் நான். அந்த இந்தியா திரும்பி வரும் என எதிர் பார்க்கிறேன்.” என்றார்


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *