கூகுளுக்கு இந்திய செய்தி நிறுவனங்கள் சங்கம் கோரிக்கை!

Share this News:

புதுடெல்லி (26 பிப் 2021): செய்தி நிறுவனங்களுக்கான விளம்பர வருவாயை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய ஊடகங்கள் சார்பில் கூகுளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

செய்தித்தாள்களின் உண்மையான உள்ளடக்கத்தைப் பகிர்வதன் மூலம் கூகிள் தனது நம்பகத்தன்மையை இந்தியாவில் நிறுவியுள்ளது என்றும் அதற்கேற்ப செய்தித்தாள்களுக்கு வெகுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் இந்திய செய்தித்தாள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து ஐ.என்.எஸ் கூகிளுக்கு எழுதியுள்ள கதிதத்தில், கூகிள் இந்திய செய்திகளின் உள்ளடக்கத்தை பயன்படுத்துவதன் மூலம் இந்தியாவில் கணிசமான நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளது, எனவே கூகிள் இந்தியாவில் அதன் விளம்பர வணிகத்திற்கு நியாயமான முறையில் பணம் செலுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்தி நிறுவனங்கள் பெரும் தொகையைச் செலவழித்து ஆயிரக்கணக்கான ஊடகவியலாளர்களின் சேவைகளைப் பயன்படுத்தி செய்திகளைச் சேகரித்து வருகின்றன. விளம்பர வருவாயில் வெளியீட்டாளர்களின் பங்கை கூகுள் 85 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

உலகை உலுக்கிய கோவிட் தொற்றுநோயும், டிஜிட்டல் துறையில் பொருளாதார வீழ்ச்சியும் இந்திய ஊடகங்களின் நிதி நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

கூகிள் முன்னர் பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள செய்தி நிறுவனன்ங்களுக்கு பணம் செலுத்தியுள்ளது இந்த வழியில் இந்திய செய்தித்தாள்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

விளம்பர வருவாயைப் பற்றி கூகிள் இன்னும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று ஐஎன்எஸ் தனது பங்கை அதிகரிப்பதைத் தவிர. நம்பகமான ஆதாரங்களில் இருந்து மட்டுமே செய்திகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் செய்திகளை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஐ.என்.எஸ் தலைவர் ஆதிமுல் கூகிள் இந்தியா மேலாளர் சஞ்சய் குப்தாவுக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *