ஜெய் ஸ்ரீராம் என கூச்சலிட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அனுமதிக்க மாட்டார்: மஹுவா மொய்த்ரா!

Share this News:

கொல்கத்தா(24 ஜன 2021): “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இப்போது இருந்தால் ஜெய் ஸ்ரீராம் என கூச்சலிட அனுமதித்திருக்க மாட்டார்” என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்தாரா தெரிவித்துள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125 வது பிறந்த நாளான நேற்று கொல்கத்தாவில் மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த ‘பரக்ரம் திவாஸ்’ விழாவில் கூட்டத்தின் போது பாஜக ஆர்வலர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷங்களை எழுப்பியதை அடுத்து கோபத்தில் மம்தா பானர்ஜி அந்த இடத்தை விட்டு வெளியேறினார். இந்த விழாவில் பிரதமர் மோடியும் பங்கேற்று இருந்தார்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மஹுவா மொய்த்ரா, “இது ஒரு அரசு விழா. இது மத விழாவிலிருந்து வேறுபட்டது. அத்தகைய விழாவில் மதம் தொடர்பான கோஷங்களை எப்படி எழுப்பலாம்?. இது ஒரு மதச்சார்பற்ற ஜனநாயகம். அது இருக்கும்வரை நீங்கள் அதை செய்ய முடியாது. பாஜகவில் உள்ளவர்களைப் போன்ற படிக்காத மக்கள் மட்டுமே இந்த வகையான செயல்களில் ஈடுபட முடியும்,” என்று அவர் கூறினார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இருந்திருந்தால், பிற மதங்களின் இந்து சகிப்புத்தன்மை ஒருபோதும் அனுமதிக்கமாட்டார் என்று தனதுஅவரது மகள் அனிதா போஸ் கூறியதாக மஹுவா மொய்த்ரா தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *