சித்திக் கப்பனை விடுதலை செய்வதில் தாமதம்!

Share this News:

லக்னோ (13 செப் 2022): சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்ற கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சித்திக் கப்பன் மீதான அமலாக்க இயக்குநரகம் விசாரித்து வரும் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால், அவர் விடுதலை ஆவது தாமதமாகலாம் என்று சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

2020 அக்டோபரில் உத்தரபிரதேசத்தில் உள்ள ஹத்ராசில் தலித் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்று கொண்டிருந்தபோது சித்திக் கப்பன் கைது செய்யப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்படார்

இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு கப்பன் உச்ச நீதிமன்றத்தால் ஜாமினில் திங்களன்று விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் அமலாக்க இயக்குனரகம் விசாரித்து வரும் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால் கப்பன் தொடர்ந்து சிறையில் இருப்பார் என்று சிறைத்துறை டிஜி பிஆர்ஓ சந்தோஷ் வர்மா தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *