நீங்கள் செய்யவில்லை என்றால் நாங்கள் செய்வோம் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

Share this News:

புதுடெல்லி (11 ஜன 2021): வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்கவில்லையென்றால் அதனை நாங்கள் நிறுத்தி வைக்க நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, ராஷ்டீரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் கே. ஜா உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

இதுகுறித்த விசாரணையில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே “பிரச்சினையின் இணக்கமான தீர்வை எங்களால் கொண்டு வர முடியுமா என்பதைப் பார்ப்பதே எங்கள் நோக்கம். நீங்கள் ஏன் (மத்திய அரசு) வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கவில்லை? கொஞ்சம் பொறுப்புணர்வு இருந்தால், நாங்கள் சட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என்று நீங்கள் கூறலாம் வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தவில்லையென்றால் நாங்கள் செய்வோம் என கூறினார்.

மத்தியரசின் இரண்டாவது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நாட்டின் பெரும்பான்மையான விவசாயிகள் இந்த வேளாண் சட்டம் தங்களுக்கு நன்மை பயக்கும் என்று கூறியுள்ளனர். அதற்கு நீதிமன்றம் “இந்த சட்டம் நன்மை பயக்கும் என்று பெரும்பான்மையானவர்கள் நினைத்தால், அவர்கள் குழுவிடம் சொல்லட்டும்”.

விவசாயிகளின் கவலைகள் கேட்கப்படும் என்று உறுதியளித்த சுப்ரீம் கோர்ட் தனது கடமையை நிறைவேற்றும் என்று எஸ்.ஏ.போப்டே கூறினார். “உங்களுக்கு நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாங்கள் எங்கள் வேலையைச் செய்வோம்.

இந்த குழுவில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்) நிபுணர்கள் இடம்பெறுவார்கள். வேளாண் சட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு தீர்வு காணும் சாத்தியத்தை ஆராய்வதற்காக ஆர்.எம்.லோதா உள்ளிட்ட முன்னாள் தலலைமை நீதிபதிகள் பெயர்களை தலைமை குழுவுக்கு நீதிமன்றம் பரிந்துரைத்தது.

தயவுசெய்து எங்களுக்கு பொறுமை குறித்து சொற்பொழிவு செய்ய வேண்டாம். பேச்சுவார்த்தையை மூலம்பிரச்சினையை தீர்க்க நீதிமன்றம் அரசாங்கத்திற்கு போதுமான நேரத்தை வழங்கியது, ஆனால் அது வேளாண் சட்டங்களில் பிடிவாதமாக உள்ளது. பிரச்சினையையும் விவசாயிகளின் போராட்டத்தையும் மத்திய அரசால் தீர்க்க முடியவில்லை என்று நாங்கள் வருந்துகிறோம்.நீங்கள் தீர்வின் ஒரு பகுதியா அல்லது பிரச்சினையின் ஒரு பகுதியா என்பது எங்களுக்குத் தெரியாது என கூறினார்.

பின்னர் வழக்கு தொடர்பான விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *