ஒலிபெருக்கிகள் தடை உத்தரவை கோவில்களும் பின்பற்ற வேண்டும் – பெங்களூரு தலைமை இமாம்!

Share this News:

பெங்களூரு (08 ஏப் 2022): கர்நாடகாவில் இந்துத்துவா குழுக்களின் ஒலிபெருக்கி சர்ச்சையில் மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், பெங்களூரு ஜாமியா மசூதியின் தலைமை இமாம் முகமது இம்ரான் ரஷாதி வியாழக்கிழமை, ஒலி அளவை அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கோயில்களும் நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கூறினார். .

இதுகுறித்து ரஷாதி கூறுகையில், “பொதுமக்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாத வகையில் ஒலியைக் கட்டுப்படுத்தும் சாதனத்தை மசூதிகளில் நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். உச்சநீதிமன்றம் பிறப்பித்த அனைத்து அறிவிப்புகளையும் பின்பற்றுவோம். அதேபோல், கோவில்களும் பின்பற்ற வேண்டும்” என ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடன் தெரிவித்துள்ளார்..

பல வலதுசாரி அமைப்புக்கள் மசூதிகளில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக பிரச்சாரங்களைத் தொடங்கிய பின்னர், ஒலி மாசுபாடு குறித்த நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்களில் இருந்து ஒலிபெருக்கிகளையும்,ஒலிவாங்கிகளையும் பெங்களூரு நகர காவல்துறையினர் செவ்வாயன்று கைப்பற்றத் தொடங்கினர்.

அதேபோல நீதிமன்ற உத்தரவை மீறிய வழிபாட்டுத் தலங்களில் இருந்து பல ஒலிவாங்கிகள், ஒலிபெருக்கிகள் கைப்பற்றப்பட்டதாகவும், வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும் நகர காவல் ஆணையர் கமல் பந்த் தெரிவித்தார்.

கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உட்பட 301 வழிபாட்டுத் தலங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (கேஎஸ்பிசிபி) படி சத்தம் குறித்த விதிகளை கடைபிடிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் என்று பந்த் கூறினார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *