மீண்டும் மேற்கு வாங்க முதல்வராக மம்தா பானர்ஜி புதன் கிழமை பதவியேற்பு!

Share this News:

கொல்கத்தா (03 மே 2021): மீண்டும் மேற்கு வாங்க முதல்வராக மம்தா பானர்ஜி திங்கள் கிழமை பதவியேற்கிறார்.

மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் அபார வெற்றி பெற்று சாதனை படைத்து உள்ளது. ஆளுங்கட்சிக்கு பலத்த போட்டியாக கருதப்பட்ட பா.ஜனதா 77 இடங்களை பெற்றது.தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து மாநிலத்தில் புதிய அரசை அமைப்பதற்கான ஏற்பாடுகளை திரிணாமுல் காங்கிரஸ் நேற்று தொடங்கி விட்டது.

அந்தவகையில் கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தலைநகர் கொல்கத்தாவில் நடந்தது. இதில் கட்சியின் சட்டமன்ற தலைவராக (முதல்-மந்திரி) மம்தா பானர்ஜி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைப்போல தற்போதைய சபாநாயகர் பீமன் பானர்ஜி, புதிய சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து மாநிலத்தின் புதிய முதல்வராக மம்தா பானர்ஜி  (புதன்கிழமை) பதவியேற்கிறார். இதன் மூலம் மாநிலத்தில் தொடர்ந்து 3-வது முறையாக அவர் முதல்-மந்திரி அரியணையை அலங்கரிக்கிறார். முன்னதாக நேற்று இரவு அவர் கவர்னர் ஜெகதீப் தங்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

கொரோனா பரவல் காரணமாக புதிய அரசின் பதவியேற்பு விழா எளிமையாக நடத்தப்படும் என ஏற்கனவே அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதைப்போல புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி 6-ந்தேதி நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் பார்த்தா சட்டர்ஜி தெரிவித்தார்.

இதற்கிடையே தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி கோர்ட்டை நாட உள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார். இந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் சுவேந்து அதிகாரியைவிட 1,200 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றதாக மம்தா பானர்ஜி முதலில் அறிவிக்கப்பட்டார். ஆனால் பின்னர் இதை திரும்பப்பெற்ற தேர்தல் கமிஷன், சுவேந்து அதிகாரி 1,957 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவித்தது.

இதனால் அந்த தொகுதயில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என திரிணாமுல் காங்கிரசார் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதை தேர்தல் கமிஷன் நிராகரித்தது. இதை எதிர்த்து கோர்ட்டை அணுக உள்ளதாக மம்தா பானர்ஜி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *