ரியாத் (20 ஏப் 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் சவூதி அரேபியாவில் 10 இந்தியர்கள் மரணம் அடைந்துள்ளனர்.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் வளைகுடா நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. இதில் சவூதி அரேபியாவில் ஞாயிற்றுக் கிழமை வரை 9362 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 97 பேர் பலியாகியுள்ளனர். 1398 பேர் கொரோனாவிலிருந்து நிவாரணம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் பலியானவர்களில் 10 பேர் இந்தியர்கள். இதில் நான்கு பேர் மதீனாவிலும், மூன்று பேர் மக்காவிலும், இருவர் ஜித்தாவிலும் மற்றும் ஒருவர் ரியாத்திலும் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை சவூதி கேஸட் நாளிதழ் தெரிவித்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.