ரியாத் (12 செப் 2022): சவுதி அரேபியாவில் கடந்த ஒரு வாரத்தில் சட்டத்தை மீறியவர்கள் 15,000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை அனுமதி காலாவதியானவர்கள், சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசித்தவர்கள், தொழிலாளர் சட்டங்களை மீறியவர்கள் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டத்தை மீறுபவர்களைக் கண்டறியும் விசாரணை நாடு முழுவதும் வலுவாகத் தொடர்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் கைது செய்யப்படுகின்றனர். உள்துறை அமைச்சகத்தின் கீழ், பல்வேறு துறைகள் இணைந்து ஆய்வு நடத்தி வருகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் 15,568 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.