ஒமானில் சட்டவிரோத தபால் சேவைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை!

Share this News:

மஸ்கட் (13 செப் 2022): ஓமானில் சட்டவிரோத அஞ்சல் சேவைகளுக்கு எதிராக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .

இதுபோன்ற தபால் சேவை வழங்குநர்கள் தங்கள் செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும், இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடிதங்கள், சிறிய தொகுப்புகள் மற்றும் பார்சல்கள் போன்ற அனைத்து பொருட்களையும் பெறுதல், வரிசைப்படுத்துதல் மற்றும் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து தேவையான உரிமத்தைப் பெறுவது கட்டாயமாகும்.

உரிமம் பெற்ற நிறுவனங்களின் அலுவலகங்கள், கிளைகள், ஆப்ஸ் மற்றும் இ-பிளாட்ஃபார்ம்கள் மூலம் இந்த சேவைகள் வழங்கப்பட்டாலும், தபால் சேவைகளுக்கு தனி உரிமம் தேவை. அஞ்சல் சேவைகளை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட விரும்பும் தனிநபர்கள், நிறுவனங்கள், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

சட்டம் மற்றும் விதி 38ன் கீழ் உள்ள ஒழுங்குமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக பரிசீலித்த பிறகு அதிகாரிகளால் உரிமம் வழங்கப்படும். உரிமம் பெறாமல் இதுபோன்ற சேவைகளில் ஈடுபட்டால் 1000 ரியாலுக்கு குறையாத மற்றும் 100000 ரியாலுக்கு மேல் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் தவறு செய்தால் அபராதம் இரட்டிப்பாகும்.


Share this News:

Leave a Reply