மனாமா (18 டிச 2022): பஹ்ரைன் 51 வது தேசிய தின விழா டிசம்பர் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
சாகீர் அரண்மனையில் நடைபெற்ற தேசிய தின விழாவில் பஹ்ரைன் ஆட்சியாளர் ஹமாத் பின் இசா அல் கலீஃபா தேசிய தின செய்தியை வழங்கினார். பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் சல்மான் பின் ஹமத் அல் கலீஃபாவும் விழாவில் கலந்து கொண்டார்.
மேலும், பஹ்ரைன் கண்காட்சி மற்றும் சுற்றுலா ஆணையம் மற்றும் நாட்டின் கவர்னரேட்டுகள் மற்றும் நகராட்சி மன்றங்களுடன் இணைந்து பல்வேறு வண்ணமயமான நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.
விடுமுறை தினமான வெள்ளிக்கிழமை ஈசா டவுன் இந்தியன் பள்ளி அருகே அலங்கார விளக்குகளால் அலங்கறிக்கப்பட்டிருந்தன.
பஹ்ரைன் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நேற்று நடந்த வாணவேடிக்கையையும் காண ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் குவிந்தனர்.
மருத்துவ முகாம், இரத்த தான முகாம், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் வெளிநாட்டினரும் கலந்து கொண்டனர்.
தேசிய தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை வரை அரசு அலுவலகங்கள் மற்றும் அமைச்சகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், வார இறுதி நாட்களிலும் கொண்டாட்டங்கள் தொடர்கின்றன.
Bahrain 51st National Day celebration