ரியாத் (14 ஜூலை 2020): சவூதில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து ஒரே நாளில் 7,718 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
உலகை புரட்டிப்போட்ட கொரோனா வைரஸ் சவூதிஅரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளையும் விட்டு வைக்கவில்லை.
இந்நிலையில் சமீப காலமாக சவூதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும் மீள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடி உள்ளன. அந்த வகையில் இதுவரையிலான அதிகபட்சமாக இன்று (14 ஜூலை 2020 செவ்வாய்க்கிழமை) 7,718 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மேலும் 2692 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.