ரியாத் (06 ஜன 2020): சவூதி அரேபியாவில் கோவிட் 19 தடுப்பூசி போடுவதற்கு ஆர்வமாக பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுள்ளது.
கோவிட் 19 பரவலை தடுக்க பல நாடுகளில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் சவூதி அரேபியாவில் கடந்த மாதம் முதல் கோவிட் 19 தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
உள் நாட்டு வெளி நாட்டினர் அனைவரும் செஹாத்தி அப்ளிகேஷன் பயன்பாட்டின் மூலம் கோவிட் 19 தடுப்பூசி போடுவதற்கு பதிவு செய்ய சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையே சவூதி அரேபியாவில் இதுவரை 3,63,259 பேருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 3,54,755 பேர் குணப்படுத்தப்பட்டனர். இதுவரை 6,265 பேர் இறந்துள்ளனர்.