தோஹா (14 டிச 2020): கத்தாரில் பண மதிப்பிழப்பு ( Demonetisatio) குறித்த புதிய அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் டிசம்பர் 18 2020 முதல், படத்தில் உள்ள புதிய ரியால் நோட்டுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளன. இது, கத்தார் அரசு வெளியிடும் ஐந்தாவது Banknote series ஆகும்.
இதற்கு முன் 2003 இல், நான்காவது Series வெளியிட்ட சமயம் நன்றாக நினைவிருக்கிறது. அரசு பணமதிப்பழிப்பு பற்றி அறிவித்ததும், அதைத் தொடர்ந்து மக்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி அழகான, எளிமையான முறையில் பழைய ரியால் நோட்டுகளைப் பெற்றுக்கொண்டு, புதிய நோட்டுகளை மாற்றாக வழங்கிய முறை சிலிர்க்க வைத்திருக்கிறது.
அதன்படி, deposit செய்யும் எந்த ஒரு ATM இலும் பழைய நோட்டுகளை இலவசமாகச் செலுத்தி எவரும் புதிய நோட்டுக்களைப் பெற்றுக் கொள்ளலாம். மக்கள் வாடிக்கையாகப் புழங்கும் எந்த ஒரு சிறு, குறு, பெரும் தொழில் நிறுவனங்களிலும் எப்போதும் போல் பழைய நோட்டைச் செலுத்தலாம். பொருட்களின் விலைபோக, மீதி தரும் சில்லறை நோட்டுகள் அனைத்தும் கடைக்காரரால், புதிய நோட்டுகளாக தரப்படும்.
ஜனவரி இறுதியில் துவங்கி அடுத்த மூன்று மாதங்கள் வரை எளிமையான இந்த பண சுழற்சி இருக்கும். இதில் சாமானிய மக்கள் எவருக்கும் எந்த சிரமமும் இருக்காது. கூடுதல் செலவும் இருக்காது. எந்த வங்கியிலும் எவரும் க்யூவில் காத்துக் கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. மூன்று மாதங்கள் நிறைவடைந்து விட்டபின் அடுத்து வரும் பத்து ஆண்டுகளுக்கு, மீண்டும் வாசிக்கவும், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு எப்போது வேண்டுமானாலும் எவரும் (QNB) Qatar national bank க்கு சென்று, எளிதாக பழைய ரியால்களை மாற்றிக் கொள்ளலாம். வளைகுடா நாடுகளில் பண மதிப்பிழப்பு என்பது இவாறே கடைபிடிக்கப் படுகின்றன
இந்நேரத்தில் இந்தியாவில் மோடி தலைமையிலான அரசு எந்த வித முன்னறிவிப்பும் இன்றி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என ஒரே இரவில் அறிவித்து பொதுமக்களை பரிதவிக்க வைத்ததும். அதனால் பல் உயிர்கள் பலியானதும் நினைவு கூறத்தக்கது.