கத்தார் இந்தியா இடையே கோஃபார்ஸ்ட் புதிய பட்ஜெட் விமான சேவை!

Share this News:

தோஹா (02 ஆக் 2021): கத்தார் –  இந்தியா இடையே மற்றும் ஒரு விமான சேவையாக கோஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் விமான சேவை தொடங்கவுள்ளது.

இந்தியாவின் பட்ஜெட் விமானமான நிறுவனமான கோ ஏர் ஏர்லைன்ஸ் அதன் பெயரை கோஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் என மாற்றியுள்ளது. இது கொச்சி தோஹா இடையே வாரம் இருமுறை (வியாழன் மற்றும் சனிக்கிழமை) தனது விமான சேவையை நடத்தும். அதேபோல கண்ணுர் தோஹா இடையே வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விமான சேவையை நடத்தும்.

மேலும் தோஹாவிலிருந்து மும்பைக்கு வாரத்திற்கு நான்கு நாட்கள் இதன் சேவை இருக்கும். (திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் சேவைகள் இருக்கும்.) புதிய சேவைகளைச் சேர்ப்பதன் மூலம் கோஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் டிக்கெட் விலை குறையும் என்று நம்பப்படுகிறது.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் கண்ணூர், கொச்சி மற்றும் மும்பையிலிருந்து தோஹாவிற்கான சேவைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, ​​ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் கத்தார் ஏர்வேஸ் ஆகியவை இந்தியா-கத்தார் இடையே ஒப்பந்தத்தின் கீழ் விமான சேவைகளை இயக்குகின்றன.


Share this News:

Leave a Reply