துபாயில் கடற்கரை மற்றும் ஹோட்டல்கள் மீண்டும் திறப்பு!

Share this News:

துபாய் (12 மே 2020): துபாயில் மூடப்பட்டிருந்த ஹோட்டல்கள், கடற்கரை உள்ளிட்டவைகள் செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வளைகுடா நாடுகளில் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்திலும் ஹோட்டல், கடற்கரை உள்ளிட்டவைகள் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முதல் ஹோட்டல்கள், கடற்கரை உள்ளிட்டவைகள் சில விதிமுறைகளுடன் திறக்கப்படுகின்றன. அதன்படி அனைத்து வெளிப்புற இடங்களிலும் 5 அல்லது அதற்கு குறைவானவர்கள் மட்டுமே ஒன்று கூட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நீச்சல், ஜிம், உடற்பயிற்சி இடங்கள், அழகு நிலையைங்கள், குழந்தைகள் விளையாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும்.

மேலும் வெளிப்புற விளையாட்டுகளில் ஐந்து அல்லது அதற்கு குறைவானவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி.

Source: Gulf news


Share this News: