சவூதியில் வீட்டு வேலை செய்பவரின் இக்காமாவை மூன்று மாதத்திற்கு புதுப்பிக்க முடியுமா?

Share this News:

ரியாத் (27 ஜன 2023): சவூதி அரேபியாவில் பணியாளர்கள் விசாவில் இருப்பவர்கள் 3, 6 மாதங்கள் மற்றும் ஒரு வருடத்திற்கு இக்காமாவை புதுப்பிக்கலாம் ஆனால் வீட்டு விசாவில் உள்ளவர்கள் ஒரு வருடத்திற்கு மட்டுமே இக்காமாவை புதுப்பிக்க முடியும்.

குடிவரவு சட்டத்தின் படி, வீட்டுப் பணியாளர்களின் இகாமாவை மூன்று மாதங்களுக்கு புதுப்பிக்க முடியாது. பணியாளர் விசாவில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே இகாமாவை மூன்று மாதங்களுக்கு புதுப்பிக்க முடியும். வீட்டுப் பணியாளர் விசாக்கள் இந்த வகையின் கீழ் வராது.

எனவே, தொழிலாளர் மற்றும் மனித வள அமைச்சகத்துடன் வீட்டுப் பணியாளர் விசா இணைக்கப்படவில்லை. வீட்டு வேலை செய்பவர்களுக்கு தொழிலாளர் அமைச்சகத்தின் பணி அனுமதி கிடைக்கவில்லை. பணி அனுமதி பெற்றவர்கள் மட்டுமே மூன்று, ஆறு மற்றும் ஒரு வருடத்திற்கு இகாமாவை புதுப்பிக்க முடியும்.

இகாமா காலாவதியாகும் முன் வீட்டு விசாவில் உள்ளவர் எக்சிட்டில் வெளியேறலாம். ஃபைனல் எக்சிட்டைத் தாண்டிய பிறகு, அன்றிலிருந்து இன்னும் 60 நாட்கள் சவுதியில் தங்கலாம். அல்லது ஒரு வருடத்திற்கு இகாமாவைப் புதுப்பித்து, விரும்பியபடி இக்காமால் காலாவதியாகும் முன் எக்ஸிட்டில் செல்லலாம்.


Share this News:

Leave a Reply