புதுடெல்லி (18 செப் 2021): இந்தியா சவூதி அரேபியா இடையேயான சார்ட்டட் விமான சேவை நிறுத்தப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக இந்தியா சவூதி அரேபியா இடையே வந்தே பாரத் திட்டத்தின் மூலம் சார்ட்டட் விமான சேவை மட்டுமே இயங்கி வந்தன. ஆனால் தற்போது UAE கத்தார், பஹ்ரைன், ஓமன் மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் மூலம் இணைப்பு விமான சேவைகள் இப்போது இலகுவாக கிடைக்கின்றன.
இதனால் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் இந்தியா ஆகியவை சவுதி அரேபியாவிலிருந்து விமான சேவைகளை இயக்கிய நிலையில் தற்போது அவை நிறுத்தப்படுகின்றன.
அதிக கட்டணம் மேலும் பயண சிரமம் உள்ளிட்டவை இருந்ததால் தற்போது இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஏர் இந்தியா ஆகிய சார்ட்டட் விமான சேவை நிறுத்தப்படுகிறது.