குவைத் (10 மே 2020): குவைத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய மருத்துவர் மரணம் அடைந்துள்ளார்.
பல் மருத்துவரான வாசுதேவ ராவ் (54) கொரோனா வைரஸ் பாதிப்பால் குவைத்தில் உயிரிழந்துள்ளார். இவர் குவைத்தில் 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.
குவைத்தில் ஏற்கனவே எகிப்தை சேர்ந்த தாரிக் ஹுசைன் என்ற மருத்துவர் உயிரிழந்த நிலையில் தற்போது குவைத்தில் கொரோனாவினால் உயிரிழந்த இரண்டாவது மருத்துவர் வாசுதேவ ராவ் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Gulf News