ஜித்தா (30 ஆக 2021): சவுதியில் இரண்டு கோவிட் தடுப்பூசி பெற்றவர்கள் வேறு நாட்டில் தனிமைப்படுத்தல் இன்றி சவூதி திரும்பலாம் என்ற உத்தரவை அடுத்து இந்தியர்கள் சவூதி அரேபியா வர தொடங்கியுள்ளனர்.
கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து 395 பயணிகளுடன் ஜித்தா வந்த சவூதி அரேபின் ஏர்லைன்ஸ் சார்ட்டட் விமானத்தில், வந்த பயணிகள் ஏஜெண்டுகள் அரை லட்சத்திற்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக கூறினர்.
ஏற்கனவே சுகாதார பணியாளர்கள் வருவதற்கு சவூதி அரேபியா தடை விதிக்கவில்லை என்கிற போதிலும், புதிய உத்தரவை அடுத்து வேறு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களும் வர தொடங்கியுள்ளனர்.