ஜித்தா (05 ஆக 2021): சவூதி அரேபியா ஜித்தாவில் 45 வயது இந்தியர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பரப்பூரை சேர்ந்த குஞ்சலவி என்பவர் ஜித்தாவில் வாகனம் ஒன்றில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் நண்பர்கள் சந்தேகம் அடைந்து அவரை தேடியபோது அவர் வாகனத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது.
இந்நிலையில் கொலையாளி என சந்தேகிக்கப்படும் ஒருவரை சவூதி போலீசார் கைது செய்துள்ளனர். எனினும் கொலையாளி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
இவ்விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.