சவூதியில் கார் விபத்து வழக்கில் ஒன்பது ஆண்டு சிறையில் இருந்த இந்தியர் விடுதலை!

Share this News:

ஜிசான் (23 ஜன 2023): கார் விபத்து வழக்கில் ஒன்பது ஆண்டுகள் சவூதி சிறையில் இருந்த இந்தியர் அத்தாவுல்லா ஹக்கீமுல்லா விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

உத்திர பிரதேசத்தை சேர்ந்த அத்தாவுல்லா ஹக்கீமுல்லா ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு கார் ஓட்டிச் சென்றபோது கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

விபத்தில் இறந்த நபரின் குடும்பத்திற்காக சவுதி அரசு இழப்பீடு வழங்கியதை அடுத்து அத்தாவுல்லா ஹக்கீமுல்லா விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜிசான் சிறையிலிருந்து விடுதலையான இவர் அபஹா விமான நிலையத்திலிருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார்.

அதேபோல திருட்டு வழக்கில் சிக்கி சிறையில் இருந்த உ.பி.,யைச் சேர்ந்த சுக்தேவ் சிங், பீகாரைச் சேர்ந்த முகமது இஸ்ரபீல் ஆகியோரும் தண்டனை காலம் முடிந்து நாடு திரும்பியுள்ளனர்.

இந்திய தூதரக உதவியுடன், ஜிசான் KMCC பொதுச் செயலாளர் ஷம்சு பூக்கோத்தூர் சட்ட நடவடிக்கைகளை முடிக்க உடனிருந்தார்.


Share this News:

Leave a Reply