சவுதியில் பேருந்தில் பயணிப்பவர்களுக்கு அறிவுறுத்தல்!

Share this News:

ஜித்தா (24 அக் 202): சவூதியில் பேருந்து பயணிகளுக்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பயணிகளின் லக்கேஜ்களில் பெயர் விவரம் பதிவு செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்து நிறுவனங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் கொடுக்க தொடங்கியுள்ளனர். விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் தரை எல்லைகள் வழியாக சவுதி அரேபியாவிற்குள் நுழையும் மற்றும் திரும்பும் பேருந்து பயணிகள் தங்கள் லக்கேஜில் பயணிகளின் பெயர் உட்பட முழு தகவலையும் உள்ளிட வேண்டும். இது தொடர்பாக, போக்குவரத்து சேவைகளை வழங்கும் போக்குவரத்து நிறுவனங்களுக்கு அறிவிக்குமாறு சவுதி அரேபிய வர்த்தக சபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


Share this News:

Leave a Reply