ஜித்தா (10 ஜூலை 2020): இந்தியன் சோசியல் ஃபோரத்தின் முயற்சியால் ஏழு மாதக் குழந்தையின் மருத்துவச்செலவு 37 இலட்சம் ருபாய்க்கு பொறுப்பேற்றது சவூதி அரேபியா-நஜ்ரான் கவர்னர் அலுவலகம்.
கன்னியாகுமரி மாவட்டம் பாலபள்ளத்தை சார்ந்தவர் ஜோஸ்பின் இவர் சவூதி அரேபியா நஜ்ரானில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நான்கு ஆண்டுகளாக செவிலியராக பணியாற்றி வருகின்றார் ஜோஸ்பின் அவர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது இக்குழந்தை பிரசவ காலம் முழுமையடையாமல் 7 மாதத்திலே பிறந்துள்ளது.
• குழந்தைக்கு இதய வால்வில் பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது குழந்தை பிறந்ததிலிருந்து தொடர்ச்சியாக வெண்டிலேட்டர் உதவியோடு 4 மாதங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது நான்கு மாத சிகிச்சைக்காக 32 இலட்சம் ருபாய் வரையில் மருத்துவ சிகிச்சை கட்டணமாக வந்துள்ளது குழந்தையின் பெற்றோர்கள் செய்வதரியாமல் தவித்து வந்துள்ளனர்.
•குழந்தையின் உடல் நிலை மேலும் மோசமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக ஜித்தாவில் உள்ள மருத்துவமனைக்காக வெண்டிலேட்டர் உதவியோடு பயணம் செய்ய பரிந்துரைசெய்தனர்.
•பெற்றோர்கள்(ஜோஸ்பின் கணவர் சுற்றுலா விசாவில் சில மாதங்களுக்கு முன்பு சவூதி அரேபியாவிற்கு வருகை புரிந்தவர்)இந்தியன் சோசியல் ஃபோரத்தின் உதவியை நாடினர்.குழந்தையின் அவசர நிலையை உணர்ந்த நஜ்ரான் சோசியல் ஃபோரத்தின் நிர்வாகிகள் உடனடியாக நஜ்ரான் கவர்னர் அலுவலகத்திற்கு குழந்தையின் நிலையை குறித்து கடிதம் கொடுத்ததுமட்டுமில்லாமல் கவர்னர் அலுவலக அதிகாரிகளை சந்தித்து உதவியை நாடினர்.
•சவூதி அரேபியா -நஜ்ரான் கவர்னர் அலுவலகம் குழந்தையின் மருத்துவச்செலவு 37 இலட்சம் ரூபாயை பொறுப்பேற்றுக்கொண்டது மற்றும் நஜ்ரான் மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக ஜித்தா அழைத்துச் செல்ல இலவசமாக AIR-AMBULANCE க்கும் கவர்னர் அலுவலகம் ஏற்பாடு செய்து கொடுத்ததை தொடர்ந்து ஜித்தாவில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குழந்தைக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டது அறுவை சிகிச்சைக்கான செலவையும் கவர்னர் அலுவலகமே பொறுப்பேற்று கொண்டது.
•குழந்தை மற்றும் பெற்றோர்களை தாயகத்திற்கு அனுப்பும் பணியை ஜித்தா இந்தியன் சோசியல் ஃபோரம் மேற்கொண்டது அதன் அடிப்படையில் நிர்வாகிகள் ஜித்தாவில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரியை சந்தித்து இவர்களின் உதவியோடு இந்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட ஜித்தாவிலிருந்து கோயம்புத்தூர் சென்ற விமானத்தில் குழந்தைக்கு வெண்டிலேட்டர் வசதிகளோடு பயணம் செய்ய அனுமதி சீட்டு பெற்று குழந்தை மற்றும் பெற்றோர்கள் ஜோஸ்பின் மற்றும் ஜெகன் செல்வராஜ் தாயகம் திரும்பினர்.
•குழந்தையின் உயிரை காப்பாற்ற பெரும் உதவியாக இருந்த சவூதி அரசிற்கும் மற்றும் இந்தியன் சோசியல் ஃபோரத்திற்கும் பெற்றோர்கள் கண்ணீர் மல்க நன்றியினை தெரிவித்துகொண்டனர்,
தகவல் : இந்தியன் சோஷியல் ஃபோரம் ஜித்தா