மக்காவில் உம்ரா செய்ய கூடுதல் வசதிகளுடன் யாத்ரிகர்களுக்கு அனுமதி!

Share this News:

மக்கா (30 செப் 2021): புனித மக்காவில் உம்ரா செய்வதற்கு கூடுதல் யாத்ரீகர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கோவிட் பரவல் காரணமாக கட்டுப்படுகளில் இருந்த உம்ரா யாத்திரைகான கட்டுப்பாடுகள் தற்போது மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு வருகின்றன.

மேலும் முன் அனுமதியின் அடிப்படையில் முன்பை விட அதிக யாத்ரிகர்கள் மக்காவிற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் யாத்ரீகர்கள் மக்கா ஹரமுக்குள் நுழைய காபாவின் முற்றத்தில் மேலும் பல வசதிகள் செய்யப்பட்டுள்ள.. மேலும் பிரார்த்தனைக்கும் அதிக வசதிகள் செய்யப்பட்டுள்ள.

தற்போது, ​​மக்காவுக்கு தினமும் 60,000 க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் வருகை தருகின்றனர்.

மேலும் கடந்த காலத்தைப் போலல்லாமல், மக்கள் இப்போது உம்ராவிற்கான ஆன்லைன் அனுமதிகளை விரைவாகப் பெறுகிறார்கள்.

பரபரப்பான நேரம் வார இறுதி நாட்கள் தவிர உம்ராவுக்கான அனுமதிகள் பெரும்பாலும் ஒரே நாளில் வழங்கப்படுகின்றன.

உள்நாட்டில் வசிப்போர் தவக்கால்னா ஆப் மூலம் உம்ரா அனுமதி பெறலாம். மதீனா மசூதியிலும் அதிகமான மக்கள் கூடுகின்றனர்.


Share this News:

Leave a Reply