குவைத்தில் புத்தாண்டில் பாரம்பரியத்துக்கு பொருந்தாத நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை!

Share this News:

குவைத் (29 டிச 2022): புத்தாண்டை முன்னிட்டு குவைத்தில் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.

நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்துக்குப் பொருந்தாத நிகழ்ச்சிகளை நடத்துபவர்களை பிடிக்க சோதனை நடத்தப்படும் என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் பிற முக்கிய மையங்களில் பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.

தெருக்கள், சந்தைகள் போன்றவற்றில் மக்களைக் கண்காணிக்க சீருடை மற்றும் மஃப்டியில் 8,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இப்பகுதியில் உள்ள சிறப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்து எல்லை சோதனைச் சாவடிகளும் கடுமையான கண்காணிப்பில் உள்ளன. உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் கட்டுப்பாட்டு அறை மூலமாகவும்,கண்காணிப்பு இருக்கும்.

அறிவுறுத்தல்களை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரிவினர் எச்சரித்துள்ளனர்.

துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் தலால் அல் காலித்தின் உத்தரவையடுத்து, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Share this News:

Leave a Reply