குவைத்தில் வரும் ஞாயிறு முதல் பகுதி நேர ஊரடங்கு!

Share this News:

குவைத் (05 மார்ச் 2021): குவைத் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு மாதத்திற்கு பகுதி நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக இந்த ஊரடங்கு அமலுக்கு வருகிறது. மாலை 5 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தவு அமல்படுத்தப்படும்.

வியாழக்கிழமை மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த கூட்டத்தில் வெளிநாட்டினரை குவைத்திற்குள் அனுமதிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.


Share this News:

Leave a Reply