ரியாத் (13 ஜூலை 2021): சவுதிக்கு வரும் பயணிகள் சீன தடுப்பூசிகளைப் பெற்றிருந்தால் அவர்களுக்கு சவூதி அரேபியாவில் தனிமைப்படுத்தப்படல் அவசியம் இல்லை என சவூதி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சவூதி அரேபியாவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை பெற்றவர்களுக்கும், சீன தடுப்பூசிகளான, சினோஃபார்ம் மற்றும் சினோவாக் இரண்டு டோஸ் பெற்றவர்களுக்கும் சவுதியில் தனிமைப் படுத்தலில் விலக்கு அளிக்கப்படுகிறது.
அதே நேரத்தில், இந்தியாவில் இருந்து கோவாசின் பெறுற்ற பயணிகள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.