ஃபைசர் கோவிட் தடுப்பூசியால் கண் அழற்சி (வீக்கம்) – இஸ்ரேலிய ஆய்வு!

Share this News:

ஜெருசலேம் (06 ஆக 2021): ஃபைசரின் கோவிட் -19 தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு யுவேடிஸ் எனப்படும் கண் அழற்சியின் வீக்கம் உள்ளதாக இஸ்ரேலிய ஆய்வு தெரிவிக்கிறது.

இதுகுறித்து ஜெருசலேம் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், ஒரு மருத்துவமனையின் யுவேடிஸ் சர்வீஸின் தலைவரான ஹபோட்-வில்னர் அளித்துள்ள விளக்கத்தில், “, ஃபைசர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைப் பெற்ற 21 பேருக்கு முதல் ஷாட் கிடைத்த 14 முதல் 14 நாட்களுக்குள் கண் அழற்சியுடன் கூடிய வீக்கம், யுவைடிஸை உருவாகியதைக் கண்டறிந்தோம்.

இதனைத் தொடர்ந்து இதுகுறித்த ஆராய்ச்சி இஸ்ரேல் முழுவதும் பல மருத்துவ மையங்களில் நடத்தப்பட்டது.”ஆய்வில் ஃபைசரின் கோவிட் -19 தடுப்பூசி க்கும் யுவீடிஸ் வருவதற்கும் தொடர்புண்டு என்பதை உறுதி செய்தோம்.” என்று ஹபோட்-வில்னர் கூறினார்.

எனினும் இதன் பெரும்பாலான அறிகுறிகள் லேசானவை என்று ஆய்வு கூறுகிறது. அனைத்து யுவேடிஸ் நிகழ்வுகளும் கண் சொட்டு மருந்துகளால் சிகிச்சையளிக்க முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

ஹபோட்-வில்னரின் கூற்றுப்படி, “இரண்டாவது டோஸைப் பெற்ற பிறகு ஒரே ஒரு நோயாளி மட்டுமே அதிகம் பாதிப்படைந்தார். மற்றபடி அனைவரும் உரிய சிகிச்சைக்குப் பிறகு நிவாரணம் பெற்றனர். என்று தெரிவித்துள்ளர்.

மேலும் “இது மிகவும் அசாதாரணமானது, ஆனால் உங்கள் கண்களில் ஏதோ தவறு இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், உங்களுக்கு வலி, சிவத்தல் அல்லது பார்வை குறைபாடு இருந்தால், தயவுசெய்து கண் மருத்துவரை அணுகவும்,” என்றும் ஹபோட்-வில்னர் கூறினார்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *