ரியாத் (28 டிச 2022): பல வருடங்களுக்குப் பிறகு தாயின் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றிய மகனின் சமூக வலைதள பதிவு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமீர் ரஷீன் வானி என்கிற விமானி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் “புனித மக்காவிற்கு செல்ல வேண்டும் என்பது எனது பள்ளிப் பருவத்திலிருந்தே தனது தாயின் ஆசையாக இருந்தது, அதனை நான் இயக்கும் விமானத்திலேயே அழைத்துச் சென்று தற்போது நிறைவேற்றியுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அமீரின் ட்வீட்டில், பள்ளி மாணவனாக இருந்தபோது அவரது லட்சியம் குறித்து அவரது தாயார் அவருக்கு எழுதிய பழைய கடிதத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், என் தாயாரின் ஆசையை இன்று நிறைவேற்றியுள்ளேன்.
இன்று நான் விமானியாக இயக்கும் விமானத்தில் மக்காவுக்கு அழைத்துச் செல்லும் பயணிகளில் தனது தாயும் இருப்பதாக அமீர் ட்வீட் செய்துள்ளார்.
https://twitter.com/AmirRashidWani/status/1607261439940792321
இந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள பலர், சமீப காலங்களில் தாங்கள் பார்த்த மகிழ்ச்சியான ட்வீட் இது. இந்த தருணத்தை ‘இறைவனின் அருள்’ என்று அழைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அமீரின் ட்வீட்டை பலர் ரீட்வீட் செய்துள்ளனர்.