தோஹா (03 ஜூலை 2021): மத்திய கிழக்கில் சிறப்பாக செயல்படும் நிதி நிறுவனங்களின் பட்டியலில் கத்தார் நேஷனல் வங்கி முதலிடத்தில் உள்ளது.
கத்தார் நேஷனல் வங்கி உலகளவில் 79 வது இடத்தில் உள்ளது. மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா உள்ளிட்ட மேனா பிராந்தியத்தின் முதல் 1000 வங்கிகளில் கத்தார் நேஷனல் வங்கி முதலிடத்தைப் பிடித்துள்ளதாக, முன்னணி வங்கி பத்திரிகைகளில் ஒன்றான தி பேங்கர் பத்திரிகையில் வெளியிதப்பட்ட பட்டியலில் உள்ளது.
இந்த பட்டியல் தரவரிசை மொத்த சொத்துக்கள், வளர்ச்சி, லாபம் மற்றும் வாடிக்கையாளர்கள் போன்ற அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
மூன்று கண்டங்களில் 31 நாடுகளில் கிளைகள் மற்றும் துணை நிறுவனங்களைக் கொண்ட கியூஎன்பி (கத்தார் நேஷனல் வங்கி) குழுமம் மொத்தம் 20 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது. மேலும் 1,000 பிராந்தியங்களில் 4,400 ஏடிஎம்களையும் 27,000 ஊழியர்களையும் கொண்டுள்ளது. மேலும் இது உலகளவில் 79 வது இடத்தில் உள்ளது.