தோஹா (30 ஜூன் 2023):ஸ்வீடனில் குரான் எரிக்கப்பட்டதற்கு கத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மதம், நம்பிக்கை, ஜாதி என்ற பெயரில் நடக்கும் அனைத்து வெறுப்பு பிரச்சாரங்களையும் கத்தார் எதிர்க்கும்.என்று தெரிவித்துள்ள கத்தார், இஸ்லாமிய மக்களை குறிவைத்து திட்டமிட்ட வெறுப்பு பிரச்சாரங்கள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகின்றன.இது போன்ற சம்பவங்களுக்கு எதிராக சர்வதேச சமூகம் முன்வர வேண்டும். ஈத் தினத்தன்று ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள மசூதியின் முன் குர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவம் கொடூரமானது மற்றும் மிகவும் ஆத்திரமூட்டும் செயல் என்று கத்தார் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதேபோல ஸ்வீடனில் குரான் எரிப்பு சம்பவம் தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஸ்வீடன் தூதரை வரவழைத்து எதிர்ப்பு தெரிவித்தது. .
இதுபோன்ற செயல்களில் ஈடுபட அனுமதிக்கும் ஸ்வீடன் அரசின் முடிவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. .
கருத்துச் சுதந்திரத்தை இதுபோன்ற கேவலமான செயல்களுக்கு தவறாக பயன்படுத்தக் கூடாது. என்று தெரிவித்துள்ள ஐக்கிய அரபு அமீரகம் வெறுப்பு பிரச்சாரம் மற்றும் இனவெறிக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.