சவூதியில் மழை, புழுதிக் காற்று தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Share this News:

ரியாத் (13 மார்ச் 2023): சவூதியின் பல்வேறு பகுதிகளில் தற்போது பெய்து வரும் மழை மற்றும் புழுதிக்காற்று எதிர்வரும் வியாழக்கிழமை வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆசிர், அல்பாஹா, ஹைல், அல் காசிம், நஜ்ரான், ஜிசான் மற்றும் மக்கா, ரியாத் மற்றும் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் நேற்று லேசான மழை பெய்துள்ளது.

மக்கா, ரியாத், அல் ஜூஃப், வடக்கு எல்லை, மதீனா, கிழக்கு மாகாணம் மற்றும் அல் காசிம் ஆகிய இடங்களில் திங்கட்கிழமையும் மழை தொடரும். ரியாத், மக்கா, தபூக் மற்றும் மதீனாவின் சில பகுதிகளில் செவ்வாய் முதல் வியாழன் வரை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply