சவூதியில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

Share this News:

ரியாத் (28 ஜன 2023): சவுதி அரேபியாவில், எதிர்வரும் நாட்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலநிலை மாற்றத்தின் விளைவாக, சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் குளிர் நிலவும் எனவும் மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் ஜித்தாவில் பலத்த மழை பெய்தது. ரியாத் நகரிலும் இதே நிலைதான் இருந்தது. இதைத் தொடர்ந்து இந்த புதிய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

கிழக்கு மாகாணம், ரியாத் உள்ளிட்ட மத்திய மாகாணங்கள் மற்றும் வடக்கு எல்லைப் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சவுதியில் இம்முறை குளிர் வித்தியாசமாக உணரப்பட்டது. ரியாத்தில் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை குளிர் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை பல இடங்களில் குளிர் கடுமையாக இருந்தது. ஹைல், தபூக், மற்றும் குரியாத் ஆகிய இடங்களில் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அதேவேளை பிப்ரவரியில் குளிர் குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. காற்று வீசுவதைப் பொருத்தே பருவநிலை மாற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply