சவூதி அரேபியாவில் மழை மற்றும் காற்று வீச வாய்ப்பு!

Share this News:

ரியாத் (12 பிப் 2023): சவுதி அரேபியாவின் பல்வேறு மாகாணங்களில் வெள்ளிக்கிழமை வரை வானிலையில் மாற்றம் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தபூக், வடக்கு எல்லை, அல்-ஜவ்ஃப், அல்-காசிம், ரியாத், மதீனா மற்றும் கிழக்கு மாகாணத்தில் திங்கள் முதல் புதன்கிழமை வரை லேசான மழை பெய்யும்.

ரியாத் மாகாணம் மற்றும் மக்கா, மதீனா, அல்-ஜவ்ஃப், தபூக், வடக்கு எல்லை, ஹைல், அல்-காசிம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் செவ்வாய் முதல் வெள்ளி வரை மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீப காலமாக வளைகுடா நாடுகளில் அதிக அளவில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply