ரியாத் (08 ஜன 2023): சவுதி அரேபியாவில் குளிர் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்த வாரம் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சவூதி வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுசைன் அல்கஹ்தானி கூறுகையில், சவுதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த வாரம் மழை தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நாம் இப்போது குளிர்காலத்தின் முதல் காலாண்டில் இருக்கிறோம், அப்போது மழையும் தொடரும், மேலும் வெப்பநிலை குறையும் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மக்கா, அல்ஜாமூம், அல்காமில் மற்றும் பஹ்ரா ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், வகுப்புகள் ஆன்லைனில் நடைபெறும் என்றும் கல்வித்துறை அறிவித்துள்ளது.