ரியாத் (30 ஜுலை ): 17 மாதங்களக்குப் பின்னர் இரண்டு அளவு கோவிட் தடுப்பூசி எடுத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எல்லைகளைத் திறப்பதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
சவூதிக்கான, சுற்றுலா விசா வைத்திருப்பவர்களுக்கு தற்காலிக நுழைவுத் தடையை ஆகஸ்ட் 1 முதல் நீக்குவதாக சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளதாக சவுதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சவுதி அங்கீகரிக்கப்பட்ட இரண்டு அளவு தடுப்பூசிகளைப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்படுகிறது
சவுதி அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் ஃபைசர், அஸ்ட்ராஜெனெகா, மொடெனா, ஜான்சன் & ஜான்சன் ஆகியவை அடங்கும் . இந்த தடுப்பூசி பெற்றவர்கள் தனிமைப் படுத்தல் இல்லாமல் சவூதிக்குள் நுழைய முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் விவரங்கள் சுகாதார அமைப்பில் பதிவு செய்யப்பட வேண்டும்.
ஆனால் உம்ரா யாத்திரைக்கான கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து சவுதி அரேபியா எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.