ரியாத் (18 ஜுன் 2021): கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசுக்கான முன்பதிவு அடுத்த மாதம் முதல் தொடங்கப்படும் என்று சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்தில் உலகளாவிய பற்றாக்குறை காரணமாக இரண்டாவது டோஸ் நியமனங்களை ஒத்திவைப்பதாக சவூதி சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்தது.
மேலும் அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு, குறிப்பாக அதிக ஆபத்துள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் அளவை வழங்குவதற்காகவும் இரண்டாவது டோஸ் முன்பதிவு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே தற்போது கிட்டத்தட்ட 45 சதவிகித மக்களுக்கு குறைந்தது ஒரு டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகளைப் பெற்றுள்ளதால் இரண்டாவது டோஸ் முன்பதிவு மீண்டும் ஜூலை மாதம் முதல் தொடங்கப்படுகின்றன.
தற்போது நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 11,050 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். வெள்ளிக்கிழமை மட்டும் . 1236 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள்னார்., 1050 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மற்றும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.