ஓரியோ பிஸ்கட் சர்ச்சை – சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையம் விளக்கம்!

Share this News:

ரியாத் (04 ஜன 2023): பன்றிக்கொழுப்பு கொண்ட பிஸ்கட்டுகள் சவுதி சந்தையில் இல்லை என்று சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையம் தெரிவித்துள்ளது.

ஓரியோ பிஸ்கட் சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையம், இந்த தகவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் அளித்துள்ள விளக்கத்தில், சவூதி சந்தையில் விற்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களும் ஹலால் என்றும். சவூதி அரேபியாவில் விற்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களையும் தொடர்ந்து கண்காணித்து, அவை அங்கீகரிக்கப்பட்ட தரத்தை அடைவதை உறுதி செய்வதாக சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையம் தெரிவித்துள்ளது.

ஓரியோ பிஸ்கட்டில் பன்றிக்கொழுப்பு இருப்பதாக பரப்பப்படும் அறிக்கைகள் தொடர்பாக அதன் பயனாளர் ஒருவர் மேற்கொண்ட விசாரணைக்கு பதிலளிக்கும் வகையில் ஆணையம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.


Share this News:

Leave a Reply