ரியாத் (23 ஜூன் 2021): எஸ்.டி.சி பே இப்போது சவுதி அரேபியாவில் உள்ள வெளிநாட்டவர்களிடையே பிரபலமாக உள்ளது.
சவூதி அரேபியாவின் பிரபலமான ஆன்லைன் வால்லட் எஸ்.டி.சி பே இப்போது டிஜிட்டல் வங்கியாக செயல்படும்.
இதற்கு சவுதி மத்திய வங்கி மற்றும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளன.
இதன் மூலம் நிறுவனம் இந்தத் துறைக்கு அதிக மூலதனத்தைக் கொண்டு வரும் என்றும், தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க உதவும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.