சவூதி பஹ்ரைன் தரைவழி பயணத்திற்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி அவசியம்!

Share this News:

ரியாத் (10 மார்ச் 2022): சவூதி-பஹ்ரைன் தரைவழி (காஸ்வே) பயணம் செய்ய பூஸ்டர் டோஸ் கட்டாயம் என்று காஸ்வே ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை மூன்று மாதங்களுக்குள் இரண்டாவது டோஸ் பெற்றவர்களுக்கும், கோவிட் தடுப்பூசியில் சிறப்புச் சலுகை பெற்றவர்களுக்கும் இந்த விதிமுறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கோவிட் கவரேஜுடன் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டைக் கொண்ட பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் இதிலிருந்து விலக்கு பெறுகிறார்கள்.

சவூதி அரேபியாவுக்குள் நுழைவதற்கு உள்துறை அமைச்சகம் புதிய சலுகைகளை அளித்துள்ள நிலையில், காஸ்வே ஆணையத்தின் உத்தரவு வந்துள்ளது.

தற்போது சவூதிக்குள் நுழைவதற்கு முன்னர் நடைமுறையில் இருந்த தனிமைப்படுத்தல் முறையும் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் PCR சோதனை முடிவு தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply