ஜித்தா (14 டிச 2022): இந்த ஆண்டு உம்ரா சீசன் தொடங்கியதில் இருந்து இதுவரை சுமார் 40 லட்சம் உம்ரா விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக சவுதி ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது.
உம்ரா விசா வழங்குவதற்கு மின்னணு முறை அறிமுகப்படுத்தப்பட்டதே விசாக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்குக் காரணம்.
ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் இணையதளம் மூலம் வெளிநாட்டிலிருந்து யாத்ரீகர்கள் விண்ணப்பிக்கலாம். சுற்றுலா மற்றும் விசிட் விசாவில் வருபவர்களும் இப்போது உம்ரா செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
உம்ரா விசாவில் சவூதி அரேபியாவுக்கு வருபவர்கள் மெக்கா, மதீனா மற்றும் ஜித்தாவுக்கு மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டனர், ஆனால் இப்போது அவர்கள் நாட்டில் எங்கும் பயணம் செய்யலாம், இது யாத்ரீகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வழிவகுத்தது.