ரியாத் (15 டிச 2022): சவுதி அரேபியாவில், மோசமான காலநிலையில் தொழிலாளர்கள் பணியிடங்களுக்கு வர வேண்டாம் என நிர்வாகம் மற்றும் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரியாத் உட்பட சவூதி அரேபியாவின் பல நகரங்களில் கடந்த சில வாரங்களாக கடுமையான மழை, புயல் காற்று வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.
முக்கியமாக, பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் சரியான நேரத்தில் பணி செய்யும் இடத்திற்குச் சென்று சேர திணறி வருகின்றனர்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், வீட்டில் இருந்தபடி வேலை செய்ய அல்லது அதற்குப் பதிலாக வேறொரு நாளில் வேலை செய்ய பரிந்துரைக் கப்படலாம்.
தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து தனியார் நிறுவனங்களும் விழிப்புடன் இருக்குமாறும் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.