
மகாத்மா காந்தி குறித்து அவதூறாக பேசிய பாஜக எம்பிக்கு நோட்டீஸ்!
புதுடெல்லி (04 பிப் 2020): மஹாத்மா காந்தி பற்றி அவதுாறாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் பேசிய, பா.ஜ., – எம்.பி., அனந்த குமார் ஹெக்டேவுக்கு, இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெங்களூருவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக எம்பி அனந்த்குமார் ஹெக்டே, “மகாத்மா காந்தியின் உண்ணாவிரத போராட்டம், சத்யாகிரகம் ஆகியன நாடகம். காந்தியின் சாகும் வரை உண்ணாவிரதம், சத்யாகிரக போராட்டத்தாலேயே நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததாக காங்.,ஐ ஆதரிப்போர் கூறி வருகின்றனர். அது…