பெங்களூரு (03 பிப் 2020): மகாத்மா காந்தியின் போராட்டம் ஒரு நாடகம் என்று பாஜக எம்.எல்.ஏ கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக எம்பி அனந்த்குமார் ஹெக்டே, “மகாத்மா காந்தியின் உண்ணாவிரத போராட்டம், சத்யாகிரகம் ஆகியன நாடகம். காந்தியின் சாகும் வரை உண்ணாவிரதம், சத்யாகிரக போராட்டத்தாலேயே நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததாக காங்.,ஐ ஆதரிப்போர் கூறி வருகின்றனர். அது உண்மையல்ல. சத்யாகிரகத்தால் ஆங்கிலேயர்கள் நமது நாட்டை விட்டு செல்லவில்லை. விரக்தியாலேயே ஆங்கிலேயர்கள் சுதந்திரம் அளித்தனர்.
ஒட்டுமொத்த சுந்திர போராட்டமும் ஆங்கிலேயர்களின் ஆதரவு மற்றும் ஒப்புதலுடனேயே நடந்தது. இவர்கள் சொல்வது போல், தலைவர்கள் யாரையும் போலீசார் தாக்கவில்லை. இவர்களின் சுதந்திர போராட்டமே ஒரு மிகப் பெரிய நாடகம்.” . என்று பேசியுள்ளார்.
ஒருபுறம் மகாத்மா காந்தியை மதிப்பதுபோல் நடித்துக் கொண்டு , மறுபுறம் காந்தியை கொச்சைப் படுத்துவது பாஜகவின் வாடிக்கையாகிவிட்டன.