நீதிபதி எஸ்.அப்துல் நசீர் ஒரு சங்பரிவார் ஆதரவாளர் – எம்.பி, ரஹீம் பகீர் குற்றச்சாட்டு!

புதுடெல்லி (12 பிப் 2023): ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.அப்துல் நசீர் ஆளுநராக நியமிக்கப்பட்டதை கேரள நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.ரஹீம் கடுமையாக விமர்சித்துள்ளார். அயோத்தி வழக்கில் இறுதித் தீர்ப்பை வழங்கிய பெஞ்சில் உறுப்பினராக இருந்தவரும், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவருமான நீதிபதி சையது அப்துல் நசீர் ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி சையது அப்துல் நசீர் ஜனவரி 4ம் தேதி ஓய்வு பெற்றார். இன்றோடு ஆறு வாரங்களே ஆகின்றன. இந்நிலையில் இன்று அவர் ஆந்திர மாநில…

மேலும்...

ஆளுநர் பதவியிலிருந்து விலக முடிவு!

மும்பை (24 ஜன 2023): மகாராஷ்டிர ஆளுநராக பகத்சிங் கோஷ்யாரி செயல்பட்டு வருகிறார். உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது ஆளுநர் – முதல்வர் இடையே சிறுசிறு மோதல் நிலவி வந்தது. பின்னர், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதால் முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பா.ஜ.க.வுடன் இணைந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது. இந்நிலையில், மகாராஷ்டிர ஆளுநர் பதவியில் இருந்து விலக பகத்சிங் கோஷ்யாரி முடிவு…

மேலும்...

தமிழக ஆளுநரை திரும்பப்பெறக் கோரி குடியரசுத் தலைவரிடம் மனு!

புதுடெல்லி (09 நவ 2022): தமிழக ஆளுநராக இருந்து வந்த பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டு, மேகாலயா, நாகலாந்து மாநிலங்களில் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமித்தது. தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட உடனேயே திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழக ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தும்…

மேலும்...

ஆளுநர் திமுக மோதல் – ஆளுநர் திடீர் டெல்லி பயணம்!

சென்னை (07 ஏப் 2022): தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா, கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்கள் ஆளுநர் ரவி முன் நிலுவையில் உள்ளன. இதை வலியுறுத்தி கடந்த 4-ம் தேதி மக்களவையில் `தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை நீக்க வேண்டும்’ என்று திமுக-வினர் கோரிக்கை வைத்திருந்தனர். அதைத்தொடர்ந்து தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஆளுநர் நிலுவையில் வைத்துள்ளார்…

மேலும்...

பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுனருடன் திடீர் சந்திப்பு!

சென்னை (21 மார்ச் 2022): தமிழ்நாடு மின்வாரியம் பி.ஜி.ஆர். நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து இருக்கிறார். கடந்த 16 ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ரூ.355 கோடி இழப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனமான பி.ஜி.ஆர். எனர்ஜியிடம் முறைகேடாக ரூ.4,442 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து இருப்பதாக குற்றம்சாட்டினார். இந்த நிலையில், இன்று காலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை…

மேலும்...

மேற்கு வாங்க சட்டசபை முடக்கம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை (13 பிப் 2022): மேற்கு வங்க சட்டமன்றத்தை முடக்கிய ஆளுநரின் செயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்குள்ள ஆளுநர் ஜக்தீப் தன்கர்ம்க்கும் , முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.’எனக்கு எந்த மரியாதையும் கொடுப்பதில்லை; நான் கேட்கும் கேள்விகள், விளக்கங்களுக்கு பதில் அளிப்பதில்லை’ என, மாநில அரசு மீது, கவர்னர் குற்றஞ்சாட்டுகிறார் ஆளுநர் .மாநில அரசோ, ‘சட்டசபையில்…

மேலும்...

ஆளுநர் தனது கடமையை செய்ய தவறிவிட்டார் – முதல்வர் ஸ்டாலின்!

சென்னை (05 பிப் 2022): தமிழக ஆளுநர் அரசியலமைப்பு விதிப்படி தனது கடமையை செய்யவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குக் கோரும் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் துவங்கியது. இதில் 10 கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அனைத்து கட்சியினருடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை…

மேலும்...

இது நாகலாந்து அல்ல, தமிழ்நாடு – ஆளுநருக்கு எதிராக கொந்தளித்த திமுக!

சென்னை (30 ஜன 2022): இது தமிழ்நாடு, நாகலாந்து அல்ல என்பதை ஆளுநர் உணர வேண்டும் என்று முரசொலி தமிழக ஆளுநருக்கு எதிராக கட்டுரை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக ஆளுநராக பொறுப்பேற்றிருக்கும் ஆர்.என். ரவி கடந்த 25ம் தேதி குடியரசு தின வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த செய்தியில், “ நம்முடைய பள்ளி மாணவர்களும் பிற இந்திய மொழிகளைப் பயில வேண்டும். பிற இந்திய மொழிகளின் அறிவை நம்முடைய மாணவர்களுக்கு மறுப்பது என்பது அவ்வளவு சரியில்லை”…

மேலும்...

பதவியேற்பு விழாவில் கவர்னருக்கு விழுந்த பளார் – அதிர்ச்சி வீடியோ!

ஈரான் (24 அக் 2021): ஈரானில் கவர்னர் பதவியேற்பு விழாவில் பேசிக் கொண்டு இருந்தபோது கவர்னரை மர்ம நபர் பளார் என்று அடித்த காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஈரானில் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட அபிதின் கோரம் பதியேற்பு விழாவில் பேசிக் கொண்டு இருந்த நிலையில் மேடை ஏறிய மர்ம நபர் திடீரென அவரது பின்னந்தலையில் பளார் என்று அடித்து சண்டையிட தொடங்கினார். உடனடியாக பாதுகாப்பு பணியில் பாதுகாவலர்கள்…

மேலும்...

பாஜக தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை (22 ஆக 2021): மணிப்பூர் மாநில ஆளுநராக தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார். மாநிலங்களவை முன்னாள் எம்.பியான இல.கணேசன் பாஜகவின் தேசியக்குழு உறுப்பினராக உள்ளார். தஞ்சையை சேர்ந்த இல கணேசன் (வயது 78) தமிழக பாஜக தலைவராகவும் இருந்துள்ளார். சிக்கிம் ஆளுநர் கங்காதர பிரசாத், மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு…

மேலும்...