ஆளுநர் பதவியிலிருந்து விலக முடிவு!

Share this News:

மும்பை (24 ஜன 2023): மகாராஷ்டிர ஆளுநராக பகத்சிங் கோஷ்யாரி செயல்பட்டு வருகிறார். உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்தபோது ஆளுநர் – முதல்வர் இடையே சிறுசிறு மோதல் நிலவி வந்தது.

பின்னர், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதால் முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து பா.ஜ.க.வுடன் இணைந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது.

இந்நிலையில், மகாராஷ்டிர ஆளுநர் பதவியில் இருந்து விலக பகத்சிங் கோஷ்யாரி முடிவு எடுத்துள்ளார். பதவி விலகல் முடிவை ஆளுநர் கோஷ்யாரி பிரதமர் மோடியிடம் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் கோஷ்யாரி அரசியல் பொறுப்புகளில் இருந்து விடுபட்டு தனது எஞ்சிய காலத்தை எழுத்து, வாசிப்பு மற்றும் பிற நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புவதாக பிரதமர் மோடியிடம் கூறியுள்ளதாக மகாராஷ்டிர ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் மகாராஷ்டிர ஆளுநர் பதவியை பகத்சிங் கோஷ்யாரி விரைவில் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப் படுகிறது.


Share this News:

Leave a Reply