இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்!

ஜகார்த்தா (10 பிப் 2023): இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியமான பப்புவாவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜெயபுரா நகருக்கு தென்மேற்கே கடலுக்கடியில் 22 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக, கடற்கரையை ஒட்டி இருந்த ஒரு ஓட்டல் இடிந்து கடலில் விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர். மேலும் சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும்...

இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!

ஜகார்த்தா (14 டிச 2021): இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள மெளமரே அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 7.6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதனால் கடலில் சுனாமி அலைகள் எழும்பக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2004 டிசம்பரில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தமிழக கடலோர…

மேலும்...

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

சுமத்ரா (03 ஆக 2021): இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் தெற்கே சுமத்ராவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.1 ஆக பதிவாகி உள்ளது என ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள மென்டவாய் தீவு அருகே சுங்கா பெனு நகரின் தென்மேற்கே 191 கி.மீ. தொலைவில் 40 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்...

இந்தோனேஷியா பயணிகள் விமானம் 62 பயணிகளுடன் திடீர் மாயம்!

ஜகார்த்தா (09 ஜன 2021): இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து 62 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் திடீரென மாயமாகியுள்ளது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாகவும், விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து போண்டியானாக் பகுதிக்குப் புறப்பட்ட ஸ்ரீவிஜய விமான நிறுவனத்துக்கு சொந்தமனவிமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரிலிருந்து மறைந்துள்ளது. போயிங் 737 ரக விமானம், 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ரேடாரிலிருந்து மறைந்துள்ளதாகத் தகவல்கள்…

மேலும்...

ரியாலிட்டி ஷோ-வில் சோகம் – மகள் பாடும்போது தாய் மரணம் (VIDEO)

ஜகார்த்தா (25 ஜன 2020): ரியாலிட்டி ஷோ-வுக்கான தேர்வு (ஆடிஷன்) நிகழ்ச்சியில், மகள் பாட்டு பாடிக் கொண்டிருந்தபோதே தாய் மரணித்த சம்பவம் பலரது இதயத்தை பிழிவதாக அமைந்துள்ளது. ஜகர்த்தா : இந்தோனேசியாவில் தனது தாயின் மருத்துவச் செலவுக்காக சிறுமி ஒருவர் பாட்டுப் போட்டியில் வென்றதும், அவர் பாடுவதை டிவி.,யில் பார்த்தபடியே தாய் உயிரிழந்த சம்பவம், கேட்போரை கலங்க வைத்துள்ளது. இந்தோனேசியாவில் லிகா தங்தத் ரியாலிட்டி ஷோ (பாடல் போட்டி) நடந்து வருகிறது இதில் வெல்பவருக்கு 28,000 யூரோ…

மேலும்...

சர்வதேச பொறியியல் போட்டியில் தங்கம் வென்ற ஃபாத்திமா ஷெரீன்!

கொழும்பு (21 ஜன 2020): இந்தோனேசியாவில் நடைபெற்ற சர்வதேச பொறியியல் போட்டியில் இலங்கை மாணவி ஃபாத்திமா ஷெரீன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் சர்வதேச போட்டி ஜனவரி 13ஆம் தேதியிலிருந்து 16ஆம் தேதி வரை இந்தோனேசியாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பாத்திமா ஷெரீன் என்ற மாணவி முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் இலங்கை திரும்பியபோது விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

மேலும்...